Others

கோவை மாவட்டம்–வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்…

கோவை மாவட்டம்
வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம் – கோவை மருத்துவமனைக்கு மாற்றம்வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்தலை, முகம் மற்றும் உடலில் பலத்த காயம் – கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு
வால்பாறை: வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை 3 கரடிகள் திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பச்சமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த மோசஸ் (51) என்பவர் வழக்கம்போல் தேயிலைத் தோட்டம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த 3 கரடிகள் திடீரென அவரை சூழ்ந்து தாக்கியதாக தெரிகிறது.கரடிகளின் தாக்குதலில் மோசஸின் தலை, முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் வலியால் அலறியதாகவும், சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.வால்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டது.காயங்களின்தீவிரம்காரணமாகமேல்சிகிச்சைதேவைப்பட்டதால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.வால்பாறை மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கரடிகள் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பச்சமலை எஸ்டேட் உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்கள் வழியாக பொதுமக்கள் தனியாகச் செல்வதை தவிர்க்கவும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். வால்பாறை புகைபட கலைஞர் ஜெயாப்பிரகாஷ் D

 

Related Articles

Back to top button
Close
Close