fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

இனி மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுமா…? அமைச்சர் தங்கமணி பதில்!

Minister thangamani about eb bill regulation

சென்னை:

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று  மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.

இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்து உள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று  மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகே, ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close