fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது- கல்வித்துறை அறிவிப்பு.

முன்பை விட தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது , பின் 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக குறைந்தது.

ஆனால் மேலும் அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது அரசு பள்ளியுள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 46 லட்சமாக குறைந்துள்ளது மிகவும் வருத்தப்பட கூடியதாக உள்ளது.

மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21,378-ஆக உள்ளது. அதில் மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிகள் 75% ஆகும். நான்கு அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆனால் 900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.

இவ்வாறு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்க்கு காரணம் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருவதாகும்.10 ஆண்டுகளுக்கு முன் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.

ஆனால் இப்போது மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 15,000-ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close