fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! 1.36 கோடி பேர் பாதிப்பு!

World corona reaches 1.36 crore

வாஷிங்டன்:

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்து உள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close