fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 228,102 ஆக அதிகரிப்பு!

World corona cases nearing 230000

லண்டன்:

உலக அளவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது.

உலகெங்கிலும் 1.26 கோடி மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 559,000 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.  68 லட்சம் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புகளில் கடந்த 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 63 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்து விட்டது.  மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1.33 லட்சத்தை தாண்டி இருக்கிறது.ஆனால், அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகரித்ததின் காரணமாகத்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.

பிரேசில் நேற்று 70,000 கொரோனா வைரஸ் இறப்புகளைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,000 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 1,200 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது, மொத்தம் 18 லட்சம் பாதிப்புகள் மற்றும் 70,400 இறப்புகள் அங்கு பதிவாகி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close