RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை ; ஸ்டாலின் அறிவிப்பு!!

காவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், ஸ்டாலின் ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், காவிரிக்காக கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்தார்.இதற்க்கான காரணம் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close