fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

1.21 கோடி…! உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…!

Nearly 1.21 crore corona cases registers worldwide

ஜெனீவா:

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. அதன் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.  தினசரி சராசரியாக 50 ஆயிரம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பிலும் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,158,731 ஆக உள்ளது.  இதுவரை இல்லாத அளவுக்கு  ஒரே நாளில் 61,647- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள்ளது.

சுமார் 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 2 ஆம் இடத்தில் பிரேசிலும் (1,716,196 ), இந்தியா 3ம் இடத்திலும் உள்ளது.

உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,21,55,402 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 551,183 ஆகும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close