fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!

last 24 hours corona patients details

டெல்லி:

இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 ஆகும். 6,075 பேர் பலியாகி உள்ளனர்.

24 மணி நேரத்தில் 9304 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,06,737 ஆக இருக்கிறது. குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,04,107.

ஒட்டு மொத்தமாக மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 47.99 சதவீதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால் தொற்று  அதிகரிக்கும், அதை குறைக்க போராடி வருகிறோம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close