fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்…!

Jammu Kashmir new governor appointed

டெல்லி:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா  செய்ததாக நேற்று தகவல்கள் வெளியானது.

தனது ராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதிக்கு கிரிஷ் சந்திர முர்மு அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. எனினும்,  இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந் நிலையில், கிரிஷ் சந்திர முர்மு  ராஜினாமா செய்ததை உறுதி படுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய  துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close