fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பிரதமர் மோடி ஒரு 420:தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்!

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மேலும்  நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டுமென காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நூறு நாள் பணியாளர்கள்தான் இந்த பரபரப்பான புகார்களின் காரணமானவர்கள்! நாட்டின் 9 மாநிலங்களில் உள்ள 150 காவல் நிலையங்களில் இந்தப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பல காவல் நிலையங்களில் இந்தப் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், சிலவற்றில் ‘விசாரிக்கிறோம்’ என்ற உத்தரவாதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

தங்களுக்கான வேலைவாய்ப்பை 100 நாட்கள்  வழங்காதது, செய்த வேலைக்கான ஊதியத்தை மிக மிக  தாமதமாக வழங்குவது, நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதியை ஒதுக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளால், அரசு தனது வாக்குறுதியை காப்பாற்ற தவறிவிட்டது என்பதே, அந்த 100 நாள் பணியாளர்களின் மிகமுக்கியமான குற்றச்சாட்டு.

அந்தவகையில், அரசின் தலைவராக உள்ள பிரதம மந்திரியின் மீது அவர்கள் புகார் அளித்துள்ளனர். NREGA Sangharsh Morcha என்ற அந்த தொழிலாளர்களின் அமைப்புதான் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close