fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ரஷ்யா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யலாமா? மத்திய அரசு முக்கிய ஆலோசனை!

India discussion over russias corona injection

டெல்லி:

ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு ஆலோசனை நடத்துகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பீகார், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இந் நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு ஆலோசிக்க உள்ளது. இந்த நிபுணர் குழு மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close