fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கை..! அமெரிக்காவை முந்திய இந்தியா!

India corona death rate beats America

டெல்லி:

24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14 லட்சம் இதுவரை உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனாவால் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் 587 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் மரணம் அடைந்தனர். ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது.

அமெரிக்காவில் 39.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 21.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் கொரானா தொற்றால் இதுவரை 11.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close