fbpx
GeneralRETamil Newsஇந்தியா

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2% கீழே குறைந்தது…!

India corona death cases decreasing

டெல்லி:

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கைகள் 50 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் பாதிப்புகள் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது, தற்போது பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 57,981 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு 26,47,664 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 924 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 50,921 ஆக உயர்ந்துள்ளது. 19,19,843 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close