fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

1 லட்சத்தை நோக்கி…! சுகாதாரத்துறையின் கொரோனா ஷாக்…!

India corona cases reaches 96169

டெல்லி:

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும் 31ம் தேதி வரை 4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55 நாட்கள் ஆகிவிட்டன.

அப்படி இருந்தும் கொரோனா தொற்று குறையவே இல்லை. 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 5242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 157 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து  36824 பேர் குணமடைய, 3029 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close