fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

சிக்கிம் எல்லையில் மோதிக் கொண்ட இந்திய, சீன ராணுவ வீரர்கள்..! திடீர் பதற்றம்!

In sikim, India, china border clash

டெல்லி:

சிக்கிமில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ பரபரப்பை உருவாக்கி உள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நடவடிக்கையால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.

பிரச்னைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தையும் நேற்று நடைபெற்றது. இந் நிலையில் சிக்கிமின்  உயரமான மலைபக்குதியில்  இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொள்வது போன்றவீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். சீன அதிகாரி ஒரு இந்திய ராணுவ வீரரால் குத்தப்படுகிறார். பின்னர் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்கின்றனர். இந்த வீடியோ காரணமாக எல்லையில் பதற்றம் உருவாகி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close