fbpx
RETamil Newsவாகனங்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல்; பயணி அதிர்ச்சி !

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிராட்லி பட்டன் என்பவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை அவர் சாப்பிட்டபோது, கல்போன்று ஏதோ ஒரு பொருள் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அது மனித பல் என தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பிராட்லி பட்டன், விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார். விமான பணிப்பெண் ஒருவர் அது கல் தான் என்று வாதிட்டுள்ளார்.

இதையடுத்து, தங்களது தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் அதற்காக பிராட்லி பட்டனிடம் மன்னிப்பு கோரியது. மேலும் அவருக்கு இழப்பீடாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 75 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம்) மதிப்பிலான இலவச கூப்பனை வழங்கியது.

Related Articles

Back to top button
Close
Close