fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்..! பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கம்!

Former president pranab mukurjee son tweet

டெல்லி:

எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கமுடன் கூறி உள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை குறித்து கூறிய மருத்துவமனை நிர்வாகம், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் இரத்த ஓட்டம் சீரடைந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள், நன்றி என தெரிவித்துளளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close