GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி…!மக்கள் அதிர்ச்சி!
15 years old tanjore girl dead due to corona

தஞ்சை:
தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்து இருப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 19ம் தேதி தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனாவிற்கு 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளது அந்த பகுதியினரை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து அந்த கிராமத்தில் சுகாதாரத்துறையின் முகாமிட்டுள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினருடன் உள்ள தொடர்புகளை கண்டறிய முயன்று வருகின்றனர்.
















