fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!

Assembly closed in west Bengal

கொல்கத்தா:

மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இந்நிலையில் நேற்று சட்டசபை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் பீமன் பந்தோபாத்தியாயா கூறியதாவது:

சட்டசபை தட்டச்சு ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த 22 பேர் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஜூலை 27-ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close