GeneralRETamil Newsஇந்தியா
கர்நாடகாவை கலங்கடிக்கும் கொரோனா…! ஒரே நாளில் 2496 பேருக்கு பாதிப்பு!
Corona cases increases in Karnataka

பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,496 பேருக்கு கொரோனா உறுதியானது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 2,496பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,077 ஆக அதிகரித்துள்ளது.
அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 842 அதிகரித்துள்ளது.
இந் நிலையில் கொரோனா தொற்று உயர்ந்தாலும் 1,152 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 17,390 ஆக உயர்ந்துள்ளது. 25,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















