ஆந்திராவில் பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவு…!
Andra Pradesh, schools open in july 13th

அமராவதி:
ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் இதுவரை 18,697 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 232 பேர் உயிரிழந்துள்ளனர். 8,422 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.
















