fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

மியான்மரில் சுரங்கத்தில் கடும் நிலச்சரிவு..! 50 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி!

50 dead in Myanmar mine landslide

நேபிடா:

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழையின் காரணமாக நிலம் ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close