fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு எஸ்ஐ பலி..! தொடரும் சோகம்!

Special si dead dye to corona in Chennai

சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு எஸ்ஐ பலியானார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை.  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களில் ஒருவராக இருக்கும் காவல் துறையினரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

இந் நிலையில்,  கொரோனா பாதிப்பு காரணமாக  சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் பலியாகியுள்ளார். பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர்  கொரோனா நோய்த்தொற்றுக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close