fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!

TMC mla dead due to corona

கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ்,  கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைகள் பலனின்றி அவர் இன்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி  இரங்கல் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

கோஷ் மறைவு மிகுந்த வருத்ததை அளிக்கிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்தார்.  அவர் அர்ப்பணிப்புடன் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றினார்.

எங்கள் அனைவரின் சார்பாக, மனைவி ஜர்னா, 2 மகள்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close