fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

12 நாள் ஊரடங்கு எதிரொலி.. உச்சத்தில் போன மதுபான விற்பனை…!

Tasmac sales increases in last 2 days

சென்னை:

சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 12 நாள் லாக்டவுன் காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று மிக அதிகம்.

அதை கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் 30ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

12 நாட்கள் ஊரடங்கு என்பதால் மதுக்கடைகளும் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய முழு ஊரடங்கு பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக்குகளிலும் கூட்டம் அலைமோதியது.

ஒட்டுமொத்தமாக 12 நாட்களுக்கும் தேவையான மதுபானங்களை ஒரே நேரத்தில் குடிகாரர்கள்  வாங்கிச் சென்றனர்.

300 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் சராசரி வியாபாரம் 18 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் குடிகாரர்களினால் மொத்தமாக 36 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close