முழு ஊரடங்கு அறிவிப்பு…! சென்னையில் விமான போக்குவரத்து இயங்குமா..?
12 days lockdown, flight service may cancel in Chennai

சென்னை:
சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை வந்து செல்லும் விமானப் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், மே, 25ல் இருந்து, உள்நாட்டு விமான சேவை இயங்கி வருகிறது. விமானங்களில் செல்ல வரும் பயணிகள் பேருந்துகள், ரயில்கள் இயங்காததால், வாடகை டாக்சிகளில் பயணிக்கின்றனர்.
தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 12 நாள் முழு ஊரடங்கில், டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு பயணிகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 12 நாள் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதால் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். ஓரிரு நாட்களில், விமானங்கள் இயக்கம் மற்றும் பயணிகள் போக்குவரத்து குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கூறினர்.
















