
டெல்லி:
இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா அதிக பாதிப்புகளுடன் காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பாதிப்பு 2 லட்சத்தை கடந்துவிட்டது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:
24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 273 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளன.
மொத்த இறப்பு எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்து உள்ளது. குறிப்பாக கடைசி 15 நாள்களில் 1 லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 9,304 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















