ஐநா நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் மதுரை நேத்ரா…! குவியும் பாராட்டுகள்!
Madurai girl n nethra announced as UN peace ambassador

மதுரை:
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை நேத்ரா, ஐநா நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் வசித்து வரும் முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸ் தமது மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்காக கொடுத்தார்.
முடி திருத்தக தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை பிரதமர் மோடி மன் கீ பாதில் பாராட்டினார். இதனையடுத்து நேத்ராவின் செயலுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

இந் நிலையில் நேத்ரா, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐநா சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக ரூ.1 லட்சத்தை பரிசுத்தொகையாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐநா மாநாடுகள் நடைபெறவுள்ள நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் குடிமை சார்ந்த அவைகளில் நேத்ராவுக்கு பேசவும் வாய்ப்பு அளிக்கப்படும். தூதராக நியமிக்கப்பட்டுள்ள நேத்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.















