ஊரடங்கால் காப்பாற்றப்பட்ட 29 லட்சம் மக்கள்….! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
Lockdown saves 29 lakh people life says union government

டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4வது முறையாக இந்த ஊரடங்கு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினரான விகே பால், புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை செயலர் பிரவீன் ஸ்ரீவத்ஸ்வா ஆகியோர் டெல்லியில் பேசியதாவது:
ஊரடங்கு இல்லை என்றால் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்ந்து இருக்கும். இப்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 80 சதவிகிதம் பேர் 5 மாநிலங்களில்தான் உள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.















