fbpx
RETrending Nowஅரசியல்இந்தியா

“சுய பாரதம்” ரூ.20 லட்சம் கோடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Rs.20 lakhs crore economic package said by Nirmala seetharaman

நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடினார். மே 18 ஆம் தேதிக்கு முன்பு பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனக் கூறினார். மேலும் வரும் பொது முடக்கம் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் எனவும் கூறினார். பின்னர் நாட்டுப் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.20 லட்சம் கோடிக்கு வகுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகை நாட்டின் ஜிடிபி மதிப்பில் 10% ஆகும்.

அந்த திட்டங்கள் பற்றிய முழு விவரம் ஏதும் நேற்று வெளியாகவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பார் என செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து திட்டங்கள் பற்றி விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அவர் தற்பொழுது செய்தியாளர்களிடம் பேசி வருகின்றார். 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் கவனம் செலுத்தப்படும் எனவும் ” தொலைநோக்கு திட்டத்தை” மோடி அறிவித்திருக்கிறார் எனவும் கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close