fbpx
RETamil Newsஇந்தியா

இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!

15 migrant labours dead in train accident

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட போதும், பலர் விரைவாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே செல்கின்றனர்.

அந்த வகையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி  மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றனர். களைப்பு அதிகமாக, இரவு நேரத்தில் அவர்கள் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 5:15 மணியளவில் அவ்வழியே வந்த சரக்கு ரயில் ஒன்று உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரயில்வே மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close