
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரான் படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்தனர்.
இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
I have instructed the United States Navy to shoot down and destroy any and all Iranian gunboats if they harass our ships at sea.
— Donald J. Trump (@realDonaldTrump) April 22, 2020
இந்நிலையில், அப்படி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.















