அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு -மோடி அரசுக்கு பெரும்பின்னடைவு!

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை பணி நீக்கம் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு அனுப்பியது. அதனால் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பொறுப்பேற்றார்.
அலோக் வர்மாவை இயக்குநருக்கான பணியிலிருந்து அவரை விடுவித்து, விடுப்பில் அனுப்பியும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நீதிபதி அமர்வுமுன் வைக்கப்பட்டு , பின்னர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பு இன்று சுப்ரிம் கோர்ட் வழங்கியது. அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் அலோக் வர்மா மீதான புகாரை மத்திய ஊழல் கண்காணிப்பகம் விசாரித்து முடிக்கும் வரை , அவர் பெரிய கொள்கை முடிவு எதையும் எடுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து , கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ சிவிசி பரிந்துரைப்படி அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆதரவு ;
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது , ‘ மத்திய அரசின் இந்த முடிவை ஏற்காமல் சுப்ரீம்கோர்ட் விடுத்துள்ள இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ரபேல் ஒப்பந்தம் பற்றி அலோக் வர்மா விசாரணை நடத்தியதாலேயே , மத்திய அரசு அவரை விடுப்பில் அனுபியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















