fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

தேர்தல் தொடர் தோல்வி எதிரொலி:விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தருவது பற்றி, மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதிலும் இருந்த விவசாயிகள் மத்திய அரசின் மீது பல்வேறு காரணங்களால் சங்கடத்தில் இருந்தனர். இந்நிலையில் விவசாயக்கடன் தள்ளுபடி , விளைபொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 3 மாநிலங்களான சதீஸ்கர் , மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பா.ஜனதா ஆட்சியை இழந்தது, விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் காலம் இறங்கிய ஏதிர்க்கட்சியான காங்கிரஸ் அந்த மூன்று மாநிலத்திலும் தன் ஆட்சியை பிடித்தது.இம்மாநிலங்களில் கிராமப்புற விவசாயிகலின் தேவைகளை கண்டுகொள்ளாத பா.ஜனதா ஆட்சியை இழந்தது என பேசப்படுகின்றது.

இதேபோல் பல்வேறு காரணங்களால் மத்திய அரசின் மீது மக்களுக்கு ஈடுபாடு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தாததால் 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை இழந்ததையடுத்து. தற்போது 2019-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் வாக்குகளை பெரும் நோக்கில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்காகவே மத்திய அரசு மூன்று திட்டங்களை யோசித்து வருகின்றது. அவை முறையே விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடனுக்கு முறையாக வட்டி செலுத்திவந்தால் அந்த விவசாயிகளுக்கு முழுமையாக வட்டி தள்ளுபடி செய்தல் , உணவு ,தனியா வகைகளுக்கு காப்பீடு செய்திருந்தால் அதற்கு பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்தல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு பிரிமியம் தொகையை பாதியாக குறைக்கவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close