fbpx
GeneralRETamil NewsTrending Nowworld

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி..!

2 crore corona cases in worldwide

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது.

அதாவது 1,92,37,886 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 7,16,530 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 12,346,089 பேர் மீண்டனர்.

அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 58,177 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 50.3 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் மேலும் 1,179 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,62,780 ஆக அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் ஒரே நாளில் 54,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.17 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 1,226 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 98,644 ஆக அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close