REஇந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – 47 பேர் பலி !

உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் இந்த வைரஸ் தொற்றானது அதிகரித்தவண்ணமாகவே உள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மத்திய அரசு சார்பில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , இறந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,947-ஆக உயர்ந்துள்ளது.இதில் 5,914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.அதேபோல் 826 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close