fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

நான் மறுபடியும் ஜெயித்து அதிபராக தொடர்வேன்…! டிரம்ப் நம்பிக்கை!

Trump confident to reatian power in USA

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் மிக முக்கியமானது, இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி போட்டியிடுகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஊடகங்களும் தொடர்ந்து கருத்து கணிப்புகளை நடத்தி கொண்டே வருகிறது. இதுவரை நடந்த கருத்துக்கணிப்பில் அதிபர் டிரம்பை விட, முன்னாள் துணை அதிபரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது ஆட்சியில் யாரும் செய்யாத பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றியை சந்தித்தது போல் இந்த தேர்தலிலும் நடக்கும் எனவும், நான் மீண்டும் அதிபராக வருவேன் என நம்புகிறேன். சில கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என தெரிவித்த அவர், தேர்தல் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close