fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை…! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!…!

Terrorists killed in jammu Kashmir

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். வடக்கு காஷ்மீரின்  ஹர்த்சிவா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் செல்போன் மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close