fbpx
RETamil Newsவாகனங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2019 டாடா ஹெக்ஸா காரை அறிமுகம் செய்தது !

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 டாடா ஹெக்ஸா எம்பிவி ரக மாடலை கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 12.99 லட்சம் ரூபாயிலிருந்து 18.37 லட்சம் ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது.

2019 டாடா ஹெக்ஸா காரின் சிறப்பம்சங்கள்:

2019 டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் என்ஜின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லதாகும்.

6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (XM மற்றும் XT வேரியன்டில் ) என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது.

இன்டிரியரில் க்ரோம் பூச்சூ மற்றும் மேற்கூறையில் இன்ஃபினிட்டி பிளாக் மற்றும் டைட்டானியம் க்ரே நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

7.0 அங்குல ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன், வீடியோ பிளேபேக் வசதி, கனெக்ட் நெக்ஸ்ட், அவசர உதவி, பார்க்கிங் உதவி மற்றும் 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் விற்பனை துணை மேலாளர் எஸ்.என்.பர்மன் வெளியிட்ட அறிக்கையில், ஹெக்ஸா மாடல் காருக்கு ஏற்கெனவே வாகன ஓட்டிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய மாடல் காரும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close