மாவட்ட தலைநகரங்களில் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …..
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், SIR பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாகவும், நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். “இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்குற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லனு சொன்னா நம்புவீங்களா? நான், நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. நான் பயமுறுத்தறதா நினைக்காதீங்க. அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தா நம்மள மாதிரியே இன்னும் லட்சக்கணக்கான பேருக்கும் இதேநிலைமைதான். ஓட்டு போடுற உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதுக்கு முக்கிய காரணம் அந்த SIR சிறப்பு தீவிர திருத்தம்.” எனப் பேசியிருந்தார் விஜய்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிரதிருத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்எனதவெகஅறிவித்துள்ளது.இதுகுறித்துதவெகபொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில்நடைபெற்றுவரும்சிறப்புத்தீவிரத்திருத்தப்பணிகளால்வாக்காளர்கள்பெரும் குழப்பத்திலும்,வாக்குரிமைபறிபோகுமோஎன்றஅச்சத்திலும்உள்ளனர் தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11 மணி முதல், தமிழக வெற்றிக்கழகத்தின்சார்பில்தமிழகம்முழுவதும்அனைத்துமாவட்டத்தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.