Others
செங்குன்றம்–உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி செங்குன்றத்தில் விழிப்புணர்வு பேரணி!

செங்குன்றம், ஆகஸ்ட் 05: சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் அமைந்துள்ள ரெலா மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பேரணியை செங்குன்றம் காவல் ஆய்வாளர். விஜயகுமார் மற்றும் ரெலா மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி.எஸ். ராஜகோபாலன் ஆகியோர்கொடியசைத்துதொடங்கிவைத்தனர்.பேரணியில்ரெலாமருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, ஜெ.என்.என். கல்லூரி மாணவிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் மற்றும் அது குழந்தைகளுக்கு தரும் நன்மைகள் குறித்த பதாகைகளை கொண்டு சென்றனர்..