fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு போட்டி; தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டி. சுமார் 1353 காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது. கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டனர். 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அந்த களத்தில் இறங்கினர். இதில் வெற்றிபெறும் மாடுபிடி வீரர்களுக்கும் , பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசாக வழங்குவதற்கு 2 கார்கள், 9 மோட்டார்சைக்கிள்கள், 700 சைக்கிள்கள் , தங்க காசுகள்,வெள்ளி காசுகள், கட்டில்கள் , பீரோக்கள் என ஏராளமான பொருட்கள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.மேலும் இந்த போட்டியை காண 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர்.

கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை பார்வையிட கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 நபர்களும் வந்திருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட இந்த போட்டியை பார்வையிட்ட அந்த குழுவினர் இந்த போட்டியை கின்னஸ் சாதனை படைத்த போட்டி என்று அங்கீகரித்து சான்றிதழையும் வழங்கினர்.

Related Articles

Back to top button
Close
Close