fbpx
Others

நீதிகேட்டு– வழக்கறிஞர் செல்வலட்சுமி..

தமிழ்நாடு, தேனி மாவட்டம் – போடி இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் விக்னேஷ் கடந்த பிப்ரவரி 13 அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளதை மெய்வழி இயக்கத்தின் சார்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி !!! தேனி மாவட்டம் போடிஇன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் வருடம் பொறியியல் படித்து வந்த நெல்லை தேவேந்திர குல வேளாளர் சமூக மாணவன் விக்னேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 13 ந் தேதி அன்று கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.இம் மாணவரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த மாணவரின் பெற்றோரை இன்று மெய்வழி இயக்கங்களின் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமியின் தலைமையில் முன்னனி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்,இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், வழக்கை சிபிசிஐடி மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், மெய்வழி இயக்கங்கள் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று, மாணவரின் பெற்றோரிடம் மெய்வழி இயக்கத்தினர் உறுதியளித்தனர். இந்த நிகழ்வில் மெய்வழி இயக்கங்களின் முன்னனி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தினேஷ், இளைஞரணி தலைவர் ஈஸ்வரன் மகளிரணி தலைவி . செயலாளர் விஜயா நகரச் செயலாளர் அருள் பாண்டி துணைச் செயலாளர் புயல் சிவா . உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close