கடலூரை ‘வளைத்த’ கொரோனா…! ஒரே நாளில் 68 பேருக்கு பாதிப்பு
CORONA ...! 68 people affected in a single day

கடலூர்: சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகம் காணப்படுவதால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
தமிழகத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியாக, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் அதிகம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பின்படி, கடந்த 3ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தது.நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இந் நிலையில், இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.















