fbpx
HealthREஉலகம்

பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!

ஜெனீவா:

2009ல் உலகளவில் தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி 5தகவலை தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் முதன்முதலில் ‘பன்றிக்காய்ச்சல்’  ‘எச் 1 என் 1’ நோய் கிருமி கண்டறிப்பட்டது.

இதில் 18,500 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இறப்புகளை உலக சுகாதார அமைப்பு  சரியாக மதிப்பிடவில்லை எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில்  இப்பொழுது  வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:

கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை  நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது 2009ல் பரவிய பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானதாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக குறைகிறது. அதாவது, கீழே செல்வதை விட மேலே செல்வது அதிகமாகி கொண்டே வருகிறது. சரியான பொது சுகாதார நடவடிக்கைகள்  இருந்தால் தான் தொடர்பு நடவடிக்கைகளை அகற்ற முடியும்.

இதில் தொடர்பு கண்டுபிடிப்பதற்கான குறிப்பிடத்தக்க திறன் உள்ளது. பரவுதலை முழுமையாக நிறுத்த, ஒரு தடுப்பூசி மிக அவசியம். ஆனால், அதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close