குச்சனூர்-சரி செய்யப்பட்ட சனீஸ்வரன் கோயில் உயர்கோபுர மின் விளக்கு…

*குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்பு உயர்கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது*
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் நுழைவாயில் முன்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்து நிலையில்தற்போது ஆடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் இரவு நேரங்களிலும் சனீஸ்வர பகவானை தரிசிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர் எனவே பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் பயன் தரும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக கிரைன் உதவியுடன் உயர் கோபுர மின்விளக்கை கீழே இறக்கி இரண்டு நாட்களாக தீவிர பணியில் ஈடுபட்டு தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு பக்தர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கப்பட்டது,குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தொடர் முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் மற்றும் மின்சாரத்துறை அலுவலர் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு விரைந்து முடிக்கப்பட்டது, இவர்கள் அனைவருக்குமே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் …….