Others
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்…
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக், “பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 எம்பிக்கள் என்னை நேரில் சந்தித்தும் அல்லது கடிதம் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், நாட்டில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் நோக்கிலும் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன். இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவில் விரிவாகவிளக்குகிறேன்.அதேவேளையில் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தராதவாறு அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.