Others
செங்குன்றம்— ராதா பாலா தியேட்டர் திருவிழா கோலம்….

தமிழகமுதல்வர்மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையிடப்படுகிறது.செங்குன்றம் ராதா பாலா திரையரங்கில் ஜனநாயகம் படத்தை பார்க்க வருகை தந்த ரசிகர், ரசிகைகள் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாட்டைபுழல் ஒன்றிய த. வெ. க. செயலாளர். மைக்கேல், செங்குன்றம் நகர செயலாளர் விஜி மற்றும் மெர்சல் கண்ணன் செய்தனர்.மேலும் பாரத், சூசை, பத்மநாபன், புண்ணிய கோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர் தியேட்டர் வளாகத்திற்குள் பட்டாசு வெடிக்கப்பட்டது.தியேட்டர் முழுதும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு ராதா பாலா தியேட்டர் திருவிழா கோலம் கொண்டிருக்கிறது.