fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடக்கம்…! மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்!

Ram temple building work starts today

அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து இன்று கட்டுமான பணி தொடங்குகிறது. சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை ஆண்டுகளில் கோவில் பணி முற்றிலும் முடிவடையும். 2024-ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலுக்கான திட்ட வரைபடம், ஒப்புதலுக்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கட்டணமாக ரூ.2 கோடி செலுத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close