fbpx
RETamil Newsஅரசியல்

புதுச்சேரி உள்ளூர் பஸ் கட்டணம் உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி!!

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் பஸ் கட்டணம் உயர்த்தபட்டுள்ளதாகவும் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகம் கூறி இருப்பதாவது:

மாநிலத்தில் உள்ளூர் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்றும் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் கட்டண உயர்வை எதிர்த்து இன்று  முதல் அரசியல் கட்சிகள் போராட்டம் செய்யவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close